Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 25 June 2025 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 25 June 2025

📅 வெளியீடு நாள்: 25-06-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9095. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதை விழாவாக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் சிறப்பிக்கப்பட்டது.

காவல்துறையினரும் அவர்களுடன் ஒத்துழைப்பு நலங்கி வரும் Traffic Wardenகளும் போக்குவரத்தை சிறப்பாக கையாண்டு வந்தாலும், வண்டி ஓட்டுபவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அவ்வப்போது ஓசூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பாகலூர் பதிவுத்துறை அலுவலகம் அருகே தொடரும் கொள்ளை நிகழ்வுகள். பாகலூரில் தொடர்ந்து பல திருட்டு நிகழ்வுகள் பதிவாகி வரும் நிலையில், கடந்த நாள், இருசக்கர வண்டியில் வைத்திருந்த ஏழரை லட்சம் ரூபாய் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சரக்குந்து ஓட்டுனர் தூங்கியதால், சரக்குந்து கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த கார் மீது மோதி, அருகில் இருந்த ஏடிஎம் மற்றும் உணவகத்தினுள் பாய்ந்தது. அருகில் யாரும் இல்லாததால், உயிர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஒசூரில் வெளிவட்டச் சாலைப் பணிக்கு தமிழக அரசு ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads