Protest Held in Hosur as Part of Nationwide General Strike | Hosur News Update - Video
Protest Held in Hosur as Part of Nationwide General Strike
📅 வெளியீடு நாள்: 12-02-2026
📄 விளக்கம்
A protest was held near the Hosur bus stand junction on Bagalur Road as part of the nationwide general strike called against certain Union Government policies. Members of various trade unions participated in the demonstration and raised slogans against the new labour codes, the Electricity Amendment Act, and the India–US agreement. Traffic congestion was reported in the area during the protest.
ஓசூரில் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்று ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓசூர் பேருந்து நிலையம் அருகே பாகலூர் சாலை சந்திப்பு பகுதியில், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகள்
மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம், இந்தியா - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், ஆகியவற்றுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








