Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 26 June 2025 | Hosur News Update - Video
Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 26 June 2025
📅 வெளியீடு நாள்: 26-06-2025
📄 விளக்கம்
நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9070. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய்119.
ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முகலூர் ஊராட்சியில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மா பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்தால் மா விளைபொருள் உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என தளி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு.
மா விலை வீழ்ச்சி ஏற்படும் பொழுது, அதை ஈடு செய்ய சந்தை தலையீட்டு திட்டத்தை, Market Intervention Scheme செயல்படுத்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ், உழவர் நலம் மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் ஒன்றிய அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான், டெல்லியில் நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய கடிதத்தை, வழங்கினார்.
பியரிங் உடைந்த ஓசூர் பாலத்தின் வழியாக இலகுரக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
ஓசூரில் தனது மனைவி பெயரில் இருக்கும் மின் இணைப்பை, தனது பெயருக்கு மாற்ற, நிகழ்நிலைத் தளம் மூலம் தம்பிதுரை என்பவர் விண்ணப்பித்துள்ளார். பத்தலப்பள்ளி மின்வாரிய உதவி பொறியாளர் முருகன் என்பவர், பெயர் மாற்றம் செய்வதற்கு 40 ஆயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முருகன் வேதிப்பொருள் தடவிய பணத்தை வாங்கும் பொழுது, கையும் களவுமாக பிடித்தனர்.
தேன்கனிக்கோட்டை பகுதியில், உணவின்றி சாலையோரம் மெலிந்த உடலுடன் கிடந்த நபரை மீட்டு, மருத்துவக் குழுவினர் முதலுதவி வழங்கினர். உயர் மருத்துவம் வழங்குவதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.