Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 27 June 2025 | Hosur News Update - Video
Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 27 June 2025
📅 வெளியீடு நாள்: 27-06-2025
📄 விளக்கம்
நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9070. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.
சூளகிரி ஊராட்சி ஒன்றியம், தியாகராசனபள்ளி ஊராட்சியில், 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 19 பார்வையற்ற பயனாளிகளுக்கு வீடு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
கடந்த நாள் பிறந்தநாள் கொண்டாடிய திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசனுக்கு, ஓசூர் மேயர் மற்றும் துணை மேயர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
கெலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, கெலமங்கலம், ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஊர் தொட்டதிம்மனபள்ளி. இந்த ஊரில் பசவன்சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட, இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை, கோவிலின் தர்மகர்த்தா உள்ளிட்ட ஐந்து நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஓசூர் மாநகராட்சி ஆணையர் 48 மணி நேரத்தில் மாற்றம். பதவி ஏற்பதற்கு முன்பே, நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு, சபீர் ஆலம் ஓசூர் மாநகராட்சி ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு, ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்.
பாரதிதாசன் நகரைச் சேர்ந்த முனாப் அலி என்பவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. அதில் வீட்டிலிருந்த பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகின.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், கடுமையான வேதிப்பொருள் நாற்றத்துடன், நுரை பொங்கி வெளியேறி வருகிறது.
தேன்கனிக்கோட்டை அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேன்கனிக்கோட்டை தளி இடையிலான சவளகிரி பேருந்து நிலையத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் பரிசு சீட்டு விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அஞ்செட்டி அருகே, தாண்டியம் மலை ஊரில் கட்டி முடிக்கப்படாத, அங்கன்வாடி கட்டிடம். பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகளை, வீட்டின் திண்ணையில் அமர வைத்து பயிற்றுவிக்கும் அவலம்.
தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று, விளை நிலங்களில் புகுந்து தக்காளி பீன்ஸ் உள்ளிட்ட விலை பொருட்களை வீணடித்து வருவதாகவும், வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு அந்த யானையை, காட்டுப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
ஓசூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் கடன் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற 80 மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி மேயர் சத்யா பாராட்டுக்கள் தெரிவித்தார்.