Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 28 June 2025 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 28 June 2025

📅 வெளியீடு நாள்: 28-06-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 8985. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.

ஆழ்துளை கிணறு பயன்படுத்தி விளை பொருள் உற்பத்தி செய்தால் வரி விதிக்கப்படும் என்று கடந்த நாள் ஒன்றிய அரசு அறிவித்ததை, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி உழவர் பெருமக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். அம்பானி மற்றும் அதானிக்கான அரசாக ஒன்றிய அரசு செயல்படுவதாக தன்னார்வலர்கள் வேதனை.

கெலமங்கலம் ராயக்கோட்டை சாலையில், சாலை விரிவாக்க பணிக்காக 200க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. இதில் அனுசோனை என்கிற ஊரில் மட்டும் சுமார் 141 வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு வீடுகள் கட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பார்த்தகோட்டை ஊரில் நெல் இயந்திர நடவு செயல் விளக்கம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நெல் தூவி நிகழ்வை துவங்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுக்கோட்டையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சுமன் ஏற்பாட்டில் தெருமுனை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மலை சார்ந்த பகுதிகளில், மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாகவும் குழந்தை திருமணம் தடுக்கும் பொருட்டும், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சிலர் களப்பணியாற்றி வருகின்றனர்.

ஓசூரில், தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார்.

ஓசூர் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக, இதுவரை நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் மணி திட்டத்தின்படி, பள்ளி குழந்தைகள் சரியான இடைவேளையில் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவார்கள் என ஓசூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

வேப்பனபள்ளி அருகே 8 மாத கருவுற்ற பெண் கழுத்தறுத்துக் கொலை. கள்ளக்காதலால் இந்த வினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓசூர் மாநகராட்சியின் ஆணையராக சபீர் ஆலம் இஆப முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு புத்தகம் வழங்கி ஓசூர் மேயர் வாழ்த்து தெரிவித்தார். வரிக்குழு தலைவர் சென்னிரப்பா மற்றும் நல வாழ்வு குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads