🚗🐘 What Happened Near Hosur? Road or Elephant’s Path? Will Make You Think! 🤯 | Hosur News Update - Video
🚗🐘 What Happened Near Hosur? Road or Elephant’s Path? Will Make You Think! 🤯
📅 வெளியீடு நாள்: 17-09-2025
📄 விளக்கம்
An elephant calmly stood by the roadside near Maragatta forest (Hosur–Anchetty stretch)… and travelers didn’t know whether to move ahead or wait! 🤔
👉 Who’s wrong here – humans for building roads on ancient elephant paths, or elephants for simply using their home ground? 🐘🌳
Some laughed, some panicked, and in the end… crackers scared the jumbo away! 🎇
⚠️ Awareness with a smile:
Respect elephant corridors
Travel cautiously in forest zones
Remember: forests belong to them too! 🌿
ஓசூர் அருகே யானை ஒன்று சாலை ஓரமாக, அமைதியாக நின்றது. அந்த வழியா போகலாமா? வேண்டாமா? போனா விரட்டி வந்து மிதிக்குமா? அல்லது விட்டுடுமா?
தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் வழியில், மரகட்டா காட்டுப்பகுதி உள்ளது. சாலை ஓரமாக சிவனே என்று, ஒரு காட்டு யானை அமைதியாக சாலையை நோக்கி நின்றது. நீண்ட நேரம் அது அங்கேயே நின்றதால், அந்த சாலையில் பயணிப்பவர்கள் அச்சத்துடன் ஆங்காங்கே நின்று விட்டனர். சிலர் தங்களது முழு வீரத்தை வெளிக்காட்டும் விதமாக அந்த வழியாக கடந்து சென்றனர். பல்லாயிரம் ஆண்டு யானைகளின் பாதையில் சாலைகளை அமைத்தது மனிதர்களின் குற்றமா? அல்லது, யானைகள் வாழ்விடத்தில் அவை நடமாடுவது குற்றமா?
தீர்ப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், பட்டாசு வெடித்து யானையை விரட்டி விட்டார்கள்!








