Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 03 July 2025 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 03 July 2025

📅 வெளியீடு நாள்: 03-07-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9065. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.

குருதி உரைதல் குறைபாடு, தலசீமியா குறைபாட்டால் அல்லல்படும் 10 வயது சிறுமி, மருத்துவத்திற்காக 14 லட்சம் ரூபாய் நன்கொடை வேண்டி காத்திருப்பு. உதவ மனம் உள்ளவர்கள் 9 8 4 3 6 4 8 8 1 8 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அசோகா தூண் அருகே அமைந்துள்ள ஆர் கே அக்டோ பகுதியில், 60 ஆயிரம் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைந்துள்ளது. அது அமைந்துள்ள வளாகப் பகுதி புதர் மண்டி கிடப்பதாலும், மதில் உடைந்து கிடப்பதாலும், தண்ணீர் தொட்டி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வளாகப் பகுதியை சீர் செய்து தண்ணீர் தொட்டியை பாதுகாக்க அப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை.

ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மலர் விற்பனை வளாகம், விற்பனையாளர்களுக்கு ஒப்படைக்கும் விழா கடந்த நாள் நடைபெற்றது. 98 கடைகளில் 69 கடைகளை மலர் விற்பனையாளர்கள் ஏலம் எடுத்துள்ளனர். விழாவில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, மக்கள் நலவாழ்வு குழு தலைவர் என்.எஸ் மாதேஸ்வரன், வார்டு உறுப்பினர் மாரக்கா செந்நீரன், கோயில் செயல் அலுவலர் சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வருவதால், ஆறுகளில் தண்ணீர் பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மீன் பிடிப்பவர்களால், மீன் பிடிக்க இயலவில்லை. இதனால் சுமார் 250 குடும்பங்கள் வரை பாதிப்படைந்து இருப்பதாகவும், தங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என்றும், பில்லிகுண்டு பகுதி மக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மகேந்திரனை மீண்டும் அதே பள்ளியில் பணியாரத் கோரி மாணவிகள் நடத்திய பாச போராட்டம். தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்கி மாநகரர்களை கலைந்து செல்ல பணித்தார்.

ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு காதணி விழாவிற்காக சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பர்கூர் அருகே தொகரப்பள்ளி ஊரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு, மத்தூர் அரசு மருத்துவமனைக்கும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads