Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 02 July 2025 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 02 July 2025

📅 வெளியீடு நாள்: 02-07-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9020. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.

ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. முறையான சாலை வசதி அமைத்து தராமல், சுங்க கட்டணம் உயர்த்துவதற்கு கடும் கண்டனங்களை வண்டி ஓட்டுகள் பதிவு செய்து வருகின்றனர்.

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணாக்கர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சூசூவாடி அரசு பள்ளியில் தண்ணீர் மணி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, அலசநத்தம், ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, அந்திவாடி அருகே விகாஸ் நகர், சாந்தி நகர், சின்ன எலசகிரி, டி வி எஸ் நகர் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் அமைப்பதற்கான பணியை நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா, ஆணையர் சபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தையா, பொது நலக்குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பங்கெடுத்தனர்.

ஓசூர் பூ மார்க்கெட் சங்கத் தலைவர் திம்மராஜ் அவர்களின் வீட்டு விழாவில், வேப்பனம் பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஜெபி என்கிற ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கெடுத்தனர்.

ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி காட்டுப்பகுதிகளில், கோடை முடிந்து, மழை ஊழி துவங்குவதால், சிறுத்தை நடமாட்டம் மற்றும் யானைகள் இடம் பெயர்ச்சி மேற்கொள்ளும் நிகழ்வுகள் ஏற்படும். இவற்றை தீவிரமாக கண்காணிக்க வனத்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

ஓசூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads