நெடுஞ்சாலையில் Toll Gate Okay... இப்போ காட்டுக்குள்ளேயும் 🚫 சுங்க கட்டணமா? மக்கள் அதிர்ச்சி! | Hosur News Update - Video
நெடுஞ்சாலையில் Toll Gate Okay... இப்போ காட்டுக்குள்ளேயும் 🚫 சுங்க கட்டணமா? மக்கள் அதிர்ச்சி!
📅 வெளியீடு நாள்: 12-10-2025
📄 விளக்கம்
Can forest residents be asked to pay toll tax to walk on their own land?
People living inside Hosur’s protected forest areas are shocked as the forest department begins collecting “entry fees” for travel and photography in the Cauvery South Wildlife Sanctuary.
Local communities demand answers: should basic movement and livelihood inside the forest cost money?
#HosurNews #ForestTax #CauveryWildlifeSanctuary #TamilNaduNews #EcoRights #Anchetty #Denkanikottai #Pilikundu #WildlifeSanctuary #HosurOnline
ஓசூர் பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதிகளில் வாழும் மக்கள் சுங்கம் வரி செலுத்த வேண்டுமா? நடமாடுவதற்கு வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வழி பிலிகுண்டு வரை பறந்து விரிந்து கிடக்கும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகள், இரண்டாக பிரிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் 2022 ஆம் ஆண்டில் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டது.
இதனால், இப்பகுதிகளில் பயணிப்பதற்கு, தங்குவதற்கு, புகைப்படம் எடுப்பதற்கு, ஆய்வுகள் மேற்கொள்வதற்கு, வனத்துறையினரின் அனுமதி வேண்டும். ஏற்கனவே அஞ்செட்டி முதல் ஒகேனக்கல் வரை சாலையில் பயணிப்பதற்கு வனத்துறையினர் சுங்கம் வசூலித்து வரும் நிலையில், காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம் பகுதியிலும் சுங்கம் வசூலிக்க துவங்கி விட்டனர்.
வன உயிரின சரணாலயப் பகுதிகளில் குற்றங்கள் இழைப்பவர்கள் பினையில் வர இயலாத சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படலாம்.