🗿 1000 Years Old Secret of Anchetty — The Forgotten Ganga Dynasty warrior Who Fought a Tiger! | Hosur News Update - Video
🗿 1000 Years Old Secret of Anchetty — The Forgotten Ganga Dynasty warrior Who Fought a Tiger!
📅 வெளியீடு நாள்: 13-10-2025
📄 விளக்கம்
A 1000-year-old inscription discovered near Anusonai, close to Hosur, speaks of a Ganga Dynasty warrior who fought a tiger to protect temple land — during the reign of Raja Raja Cholan’s son, Rajendra Cholan.
This stone record, dated 1040 CE, mentions the ancient town of Anchittam (modern-day Anchetty). Even today, the stone stands silently by the roadside, a witness to Hosur’s rich Chola-era legacy.
#HosurHistory #Anchetty #TamilHeritage #CholaDynasty #RajendraCholan #AncientTamilNadu #HosurOnline #TamilHistory #Archaeology #HosurCulture #Anusonai
ஆயிரம் ஆண்டு பழமையானதா அஞ்செட்டி என்னும் ஊர்? அஞ்செட்டியின் வரலாற்றை எடுத்துக் கூறும் அனுசோனை கல்வெட்டு.
ஓசூரை அடுத்த கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் அனுசோனை. 1040ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று, பத்து வரிகள் கொண்ட பாடலை உள்ளடக்கியதாகவும் அதில் அஞ்செட்டியை அஞ்சிட்டம் என்று பெயர் குறிப்பிட்டு கூறுகிறது.
கங்கையையும் கடாரத்தையும் அனைத்து நாடுகளையும் வென்று திரும்பிய கோப்பெரும் அரசன் ராஜேந்திர சோழனின் ஆட்சியில் நுழம்பாடியான நிகழ்வு சோழ மண்டலத்தில் இருக்கும் குயில் நாட்டில், அஞ்சிட்டம் என்ற ஊரை நாயகம் செய்கின்ற கங்க ஆடவர் சாமியின் மகன் கங்க மார்த்தாண்ட ஆடவர் சாமி என்ற வீரன் கோயில் நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தபோது தன்னை தாக்க வந்த புலியை குத்திக் கொன்று விட்டு அவனும் மான்டான் என்கிறது கல்வெட்டு பாடல் செய்தி.
இந்த கல்வெட்டு 1040ஆம் ஆண்டில், ராஜேந்திர சோழனின் 28வது ஆட்சி ஆண்டில் செதுக்கி வைக்கப்பட்டதாக இருக்கும் என தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு நிலையில், சாலை ஓரத்தில் அதன் தொன்மையை குழவிகள் கூடுகளுக்கு அறனாக நிற்கிறது.