பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த ஓசூர் காவல்துறை! Bangladeshis arrested in Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த ஓசூர் காவல்துறை! Bangladeshis arrested in Hosur
📅 வெளியீடு நாள்: 04-07-2025
📄 விளக்கம்
சுமார் 24 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஒளிந்து வாழ்ந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 நபர்களை, தட்டி தூக்கிய ஓசூர் காவல் துறை!
ஓசூர் மாநகராட்சி, நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் வங்காள நாட்டைச் சார்ந்த பஷர் முல்லா மற்றும் அவரது குடும்பத்தார் என நான்கு நபர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அணில் அக்ஷய்க்கு கிடைத்த தகவலின் பேரில், ஓசூர் நல்லூர் காவல் நிலைய காவலர்கள், பஷர் முல்லா, அவரது மனைவி ரத்னா பேகம், மகன் அலி ஜாடர் முல்லா மற்றும் உறவினர் ஜும்மா காந்தம் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
ஓசூர் காவல் துறையின் புலனாய்வு திறனை பொதுமக்கள் பாராட்டினார்கள்!