15 வயது சிறுவர்களின் உதவியுடன், 13 வயது சிறுவன் காரில் கடத்தி ****? | Hosur News Update - Video
15 வயது சிறுவர்களின் உதவியுடன், 13 வயது சிறுவன் காரில் கடத்தி ****?
📅 வெளியீடு நாள்: 04-07-2025
📄 விளக்கம்
அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி ஊரைச் சேர்ந்த சிவராஜ் மற்றும் மஞ்சு ஆகியோரது இளைய மகன் ரோகித். இவருக்கு வயது 13. இவர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
கடந்த நாள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். மாலை சுமார் 4 மணியளவில் பெற்றோரிடம் கிரிக்கெட் விளையாடுவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அஞ்செட்டி காவல் நிலையத்தில் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை வரை சிறுவன் கிடைக்காததால், காவல் துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து காவல்துறையினர், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது, இரண்டு இளைஞர்கள் சிறுவனை கடத்தியது தெரியவந்தது. இரண்டு இளைஞர்களையும் பிடித்து காவல்துறையினர் வினவியதில், ரோகித்தை கொலை செய்து தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் காட்டுப்பகுதியில் வீசியது தெரியவந்தது.
காவல்துறையினர் அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுவன் வயிற்றில் கத்தி குத்து காயத்துடன், கால்களிலும் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
சிறுவனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு இளைஞர்களையும் பிடித்து, காவல்துறையினர் தொடர்ந்து வினவி வருகின்றனர். சிறுவன் ஏன் கொலை செய்யப்பட்டார் என்கிற தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு. அரசு அலுவலர்கள் அல்லது அவர்கள் சார்பில் இயங்கும் தரகர்கள் கையூட்டு கேட்டால், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையின் தொடர்பு எண் 94450 48861 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.