Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 05 July 2025 | Hosur News Update - Video
Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 05 July 2025
📅 வெளியீடு நாள்: 05-07-2025
📄 விளக்கம்
நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9050. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.
ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் கடந்த நாள் தெரிவித்தார்.
அஞ்செட்டி சிறுவன் கொலை வழக்கில், 17 வயது கல்லூரி மாணவி, அவரது 21 வயது காதலன் மற்றும் 20 வயது இளைஞர் என மூவர் கைது. கடத்தலுக்கு உதவிய இரண்டு சிறுவர்களிடம், காவல்துறையினர் தொடர்ந்து வினவி வருகின்றனர்.
சூளகிரியில், எட்டு கோடியை 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு.
ஓசூர் நகர் காவல் நிலையத்தை சார்ந்த காவலர்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராயக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில், அவ்வழியாக பயணிக்கும் வண்டிகளை தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற காருக்குள், 107 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த மதுகுப்பிகளும் காருக்குள் இருந்ததைக் கண்டனர். காவல்துறையினர் புகையிலை பொருட்கள், மது குப்பிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்த சுகுமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கலை சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதினா விளைவித்தோர், புதினாவிற்கு சரியான விலை கிடைப்பது இல்லை என வேதனை.
ஓசூர் கிரானைட் கற்களின் பெயரைச் சொல்லி, இந்தியா முழுவதும் புதிய வகை மோசடி! கற்பனைக்கு எட்டாத குறைந்த விலையில், கிரானைட் கற்கள் விற்பதாக கூறி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில், கிரானைட் குவாரி தரகர்கள் என்ற பெயரில், பல லட்சம் ரூபாய் பணத்தை முன் பணம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகும் ஏமாற்று வேலை நடைபெற்று வருகிறது. இதேபோன்று, ஓசூரில் உற்பத்தியாகும் TMT கம்பிகளை குறைந்த விலையில் விற்பதாக கூறி முன்பணம் பெற்று பல கோடி ரூபாய் மோசடி.