Farmers Allege Free Electricity Scheme Favours the Wealthy Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Farmers Allege Free Electricity Scheme Favours the Wealthy Near Hosur

📅 வெளியீடு நாள்: 19-12-2025

📄 விளக்கம்

Farmers in areas surrounding Hosur have raised allegations that a free electricity scheme announced by the Tamil Nadu Electricity Board is benefiting wealthy applicants, while poor cultivators struggle to gain access.

As farmers battle debt and financial hardship, volunteers and farmer groups are urging the government to immediately review the scheme and ensure that it serves only genuine agricultural workers.
Questions are also being raised on whether local MLAs from Hosur and Thally will intervene.

ஓசூர் சுற்றுவட்டாரத்தில்
பணம் படைத்தவர்களுக்கு விலை இல்லா மின்சாரம்.
ஏழை உழவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய கதவு மூடப்பட்டதாக குற்றச்சாட்டு.

"காத்திருக்காமல் விளைநிலங்களுக்கு விலை இல்லா மின்சாரம்"
என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.
ஆனால், இரண்டே முக்கால் லட்ச ரூபாய்
வரைவோலையுடன் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே!.

ஏழை உழவர்கள்
கடன் சுமையிலிருந்து விடுபட போராடும் நிலையில்,
தாய்-மனைவியின் தாலியை அடமானம் வைத்து
வரைவோலை எடுக்கும் நேரத்தில்,

பெரும் பணக்காரர்கள்
மின்வாரிய உயர் அலுவலர்களுக்கு
"பரிசு தொகை" கொடுத்து
இந்த திட்டத்தை தங்களுக்கு மட்டும் என மாற்றிக் கொண்டதாக
தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விலை இல்லா மின்சாரம் யாருக்காக?
உண்மையான உழவர்களுக்கா…
அல்லது பணக்காரர்களுக்கா?

இந்த திட்டத்தை உடனடியாக மறு ஆய்வு செய்து,
உண்மையான உழவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில்
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்களும் உழவர்களும் கோரிக்கை. ஓசூர் மற்றும் தளி சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து குரல் எழுப்புவார்களா?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads