Historic Pattalamma Temple Festival to Begin in Kelamangalam | Hosur News Update - Video
Historic Pattalamma Temple Festival to Begin in Kelamangalam
📅 வெளியீடு நாள்: 17-05-2026
📄 விளக்கம்
The annual chariot festival of the historic Pattalamma Temple in Kelamangalam will begin on May 18 and continue until May 20.
Several traditional and cultural events including special rituals, folk performances, orchestra programs, and fireworks are scheduled as part of the celebrations.
கெலமங்கலம் ஊர் தேவதைக்கு தேர் திருவிழா!
பல நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு பட்டாளம்மன் கோவில், கெலமங்கலம் ஊர் நடுவே அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய கோவில் புதுப்பிக்கப்பட்டு, புதிய கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலில் பட்டாளம்மன் உடன் முத்தாலம்மன் மற்றும் வீரண்ணா எழுந்தருளி, கெலமங்கலம் உட்பட ஒன்பது ஊர்களை காத்து வருவதாக நம்பிக்கை.
கோவிலின் தேர் திருவிழா வருகிற மே 18 ஆம் நாள் துவங்கி, மே 20 ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி பூ அலங்காரம், தீபாராதனை, மடித்தேர், சிடி திருவிழா, நையாண்டி மேளம், நாடகம், ஆர்கெஸ்ட்ரா, வானவேடிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.








