HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

HR&CE Clarifies Position After Kelamangalam Protest Over 1,500 Homes

Published: 08-06-2026  ·  HosurOnline

விளக்கம்

HR&CE officials say there is no plan to demolish houses in Kelamangalam and that current efforts are aimed at collecting occupancy details and determining rent.

கெலமங்கலம் முழு அடைப்பும்... இந்து அறநிலைத்துறையின் விளக்கமும்!

சுமார் 1500 வீடுகள் இடிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, இன்று கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முழு கடையடைப்பு, ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து ஓசூர் ஆன்லைன் சார்பில் இந்து அறநிலைத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, தங்களது நிலத்தில் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் வாழ்ந்து வருவதாகவும், வீடுகளை இடிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.

குடியிருப்பவர்கள் யார், எவ்வளவு நிலத்தை பயன்படுத்துகின்றனர் என்ற தகவல்களை சேகரித்து, அதற்கேற்ப வாடகை நிர்ணயிப்பதற்காக மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கமளித்தனர்.

மேலும், நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால், நடப்பாண்டில் இருந்து மட்டும் வாடகை என முடிவெடுக்கலாம் என்றும், நீதிமன்றம் அல்லது அரசியல் தீர்வே வழி என்றால், ஆக்கிரமிப்பாளர்களே முன்வந்து கூறும், ஆக்கிரமிப்பு தொடங்கிய நாள் முதல் வாடகை கணக்கிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்து அறநிலைத்துறை கூறும் இந்த விளக்கத்தை குடியிருப்போர் ஏற்று தீர்வை எளிய வழியில் தேடிக் கொள்வார்களா?
பகிர்: WhatsApp X Facebook Threads