HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Questions Raised Over Maintenance of Well-Staffed Government School in Denkanikottai

Published: 10-06-2026  ·  HosurOnline

விளக்கம்

A government school in Denkanikottai with more than 30 teachers and extensive infrastructure has drawn attention due to concerns over campus maintenance and unused facilities.

ஓசூரை அடுத்த தேன்கனிகோட்டையில், வியப்பில் ஆழ்த்தும் அரசு பள்ளி!. தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க பெற்றோர் தயங்குவது ஏன்?.

வெறும் 295 மாணாக்கர்கள். இவர்களைப் பயிற்றுவிப்பதற்கு 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள். 5 ஏக்கருக்கும் கூடுதலான பள்ளி வளாகம். ஏராளமான வகுப்பறைகள். தனியாக மேல்நிலை தண்ணீர் தொட்டி. மிகப்பெரிய விளையாட்டு திடல்.

பூட்டியே கிடக்கும் புத்தம் புதிய கழிவறை கட்டிடம். சிதிலமடைந்த மற்றும் சரிந்து விழும் நிலையில் மதில்.

வனத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடம்... பயன்படுத்தப்படவில்லை... ஆனால்! அதன் முகப்பில் கேட்பாரற்று யாருக்காகவோ விளக்கு மட்டும் பகல் 12 மணிக்கு எரிந்து கொண்டிருக்கிறது.

"300க்கும் குறைவான மாணவர்களுக்கு சுமார் 45 லட்சம் ரூபாய் மாதச் செலவில் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தும் பள்ளி கல்வி துறையால், இந்த பள்ளி வளாகத்தை முறையாக பேணிக்காக்க இயலாமல் போனது ஏனோ?" என தன்னார்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads