Hosur Ward 44 Residents Raise Concerns Over Septic Tanks, Water Pipelines and Road Safety | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Ward 44 Residents Raise Concerns Over Septic Tanks, Water Pipelines and Road Safety

📅 வெளியீடு நாள்: 05-09-2026

📄 விளக்கம்

Residents of Manjunatha Layout and Shantinikethan Layout in Hosur Corporation Ward 44 have raised several civic and public-safety concerns.

Residents and the ward councillor allege that some properties have encroached on roads and that septic tanks are being constructed over Hogenakkal drinking-water pipelines.

They have also raised concerns about a Hosur Corporation borewell located in the middle of the road, saying it could pose a risk to motorists at night. Residents have further expressed concern about the roadside electrical connection for the water pump, which they say lacks adequate protection.

They also claim that the Shantinikethan Layout park, intended for around 2,000 households, has not been properly developed and has become an area where wastewater accumulates. Residents are demanding a proper wastewater drainage channel.

The residents have appealed to the Hosur Corporation Commissioner to examine the issues and take appropriate action.

ஓசூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் மீது செப்டிக் டேங்க் அமைத்து அதிரடி காட்டும் நபர்கள்.

ஓசூர் மாநகராட்சியின் 44 வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சுநாதா லேஅவுட் மற்றும் சாந்தினிகேதன் லேஅவுட் பகுதியில் உள்ள பலர், சாலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதுடன், செப்டிக் டேங்கை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய்கள் மீது கட்டுவதாக அப்பகுதி மக்களும், வார்டு உறுப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், ஓசூர் மாநகராட்சியின் போர்வெல் சாலையின் நடுவில் அமைத்து இருப்பதால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படலாம் என்றும், நீரூந்திகளுக்கான மின் இணைப்பு, சாலை ஓரத்தில் முறையான பாதுகாப்பு இன்றி அமைக்கப்பட்டு இருப்பதால், விளையாடும் சிறார்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், சுமார் 2000 குடியிருப்புகளுக்கு பொதுவாக அமைக்கப்பட்டுள்ள சாந்திநிகேதன் லேஅவுட் பூங்கா, மேம்படுத்தப்படாமல் கழிவு நீர் தேங்கும் இடமாக உள்ளது என கூறும் அவர்கள், கழிவு நீர் ஓடை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மாநகராட்சி ஆணையர் இது குறித்து நடவடிக்கை வேண்டும் என இந்த காணொளி வாயிலாக கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads