Attibele Border During Karnataka Bandh: Slogans Raised, Police Action as Traffic Continues | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Attibele Border During Karnataka Bandh: Slogans Raised, Police Action as Traffic Continues

📅 வெளியீடு நாள்: 13-08-2026

📄 விளக்கம்

A bandh announced in Karnataka from 6 AM to 6 PM led to a gathering at Attibele near the Hosur–Karnataka border. HosurOnline visited the border to observe the situation. Around 20 people were seen raising slogans in the Safety Island area, while traffic continued with some disruption. Shortly afterwards, around five people were taken into a Karnataka police vehicle and others dispersed. The development comes amid continuing tensions over the Cauvery water issue between Tamil Nadu and Karnataka.

ஓசூர்–கர்நாடக மாநில எல்லையில் "வாட்டர் நாகராஜ்" விடுத்திருந்த பந்த்... பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சிகள்!

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, கர்நாடக மாநிலத்தில் தமிழகத்திற்கு எதிராக முழு கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் நடைபெறும் என "வாட்டர் நாகராஜ்" அறிவித்திருந்த நிலையில், மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த காட்சிகள் உங்கள் பார்வைக்காக.

ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலை சந்திப்பு பகுதியில், ஏராளமான தமிழ்நாடு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வழக்கமான பேருந்து போக்குவரத்து நடைபெறுவதை அறிந்த நாம், எல்லைப் பகுதியின் நிலவரத்தைப் பதிவு செய்ய விரைந்தோம்.

அங்கு சுமார் 20 நபர்கள் சாலையின் Safety Island பகுதியில் நின்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போக்குவரத்து சற்று தடங்கலுடன் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில், சுமார் ஐந்து பேர் முழக்கங்களை எழுப்பியபடி கர்நாடக காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். மற்றவர்கள் வேகமாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நமது பணிவான வேண்டுகோள்... காவிரி நீர் என்பது இரு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம். இதை வைத்து இப்படியான அரசியல் செய்வதைத் தவிர்க்கலாமே?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads