Hosur Burglars Caught on CCTV: Residents Fear Night Break-Ins as Police Search for Suspects | Hosur News Update - Video
Hosur Burglars Caught on CCTV: Residents Fear Night Break-Ins as Police Search for Suspects
📅 வெளியீடு நாள்: 18-08-2026
📄 விளக்கம்
Residents in and around Hosur are concerned about repeated night-time burglaries after CCTV footage from several residential areas showed masked burglars carrying bags, breaking doors and windows and entering residential compounds. Police say a special team has been formed to trace the burglars. Residents are calling for stronger night-time security and greater police attention to the situation.
அச்சுறுத்தும் கொள்ளையர்கள், தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை, நம்பிக்கை இல்லை என புலம்பும் மக்கள்!
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், குறிப்பாக விடுமுறை நாட்களின் இரவுகளில், குறைந்த அளவு ஆடை மற்றும் முகமூடி அணிந்தபடி, முதுகில் பைகளுடன், கொள்ளையர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள், பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டால், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதுவரை மோப்ப நாய்களின் உதவியை நாடியதற்கான தடயங்களையோ, மற்றும் இரவு நேர பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையோ உணர முடியவில்லை என ஒருவித அச்சத்துடன் புலம்புகின்றனர் ஓசூர் மக்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பில் கவனம் செலுத்துவாரா?








