Hosur’s “Hidden” East Post Office Confuses Public; Residents Request Relocation | Hosur News Update - Video
Hosur’s “Hidden” East Post Office Confuses Public; Residents Request Relocation
📅 வெளியீடு நாள்: 06-12-2025
📄 விளக்கம்
Hosur’s East Post Office, once located near Thaluk Office Road, has been functioning for years at a remote, inaccessible area. With most residents unaware of its location, the public requests immediate action from authorities to relocate the post office to a central, user-friendly zone.
ஓசூரில் மறைத்து வைக்கப்பட்ட தபால் நிலையம்!. கிணற்றை காணவில்லை என்றால் அது நகைச்சுவை. ஓசூரில் தபால் நிலையம் காணவில்லை என்றால் அது வேதனை. ஓசூர் எம் ஜி சாலையில் இயங்கும் அஞ்சலகம், எப்போதும் கூட்டம் நிறைந்து பரபரப்பானது. பெரிய வளாகத்தில் அதை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலாஜி திரையரங்கு அருகே "ஓசூர் கிழக்கு துணை அஞ்சலகம்" கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்தது. திடீரென ஒரு நாள் அது மறைந்து விட்டது. இப்போது, அந்த அஞ்சலகம், முறையான சாலை வசதி இல்லாத, ஊருக்கு முற்றிலும் ஒதுக்குப்புறமான பகுதியில், ஒளிந்து செயல்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான மக்களுக்கு பயன் தராமல், இருக்கும் இடம் தெரிந்தவர்களுக்கு மட்டும் பயன்பட்டு வருகிறது. அந்த அஞ்சலகத்தை மீட்டு, முதன்மையான பகுதியில் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.








