Hosur SIPCOT Police Arrest Nigerian National and Software Professional in Methamphetamine Case | Hosur News Update - Video
Hosur SIPCOT Police Arrest Nigerian National and Software Professional in Methamphetamine Case
📅 வெளியீடு நாள்: 13-09-2026
📄 விளக்கம்
Hosur SIPCOT police have reportedly arrested a 22-year-old Nigerian national and a 23-year-old software professional from Coimbatore district during an investigation into an alleged methamphetamine transportation network.
The investigation followed repeated seizures during vehicle checks at the Zuzuvadi check-post. A special police team was formed to identify those allegedly operating behind the transportation network.
Police are continuing their investigation into other possible persons connected with the case.
ஓசூர் காவல்துறையினரின் புலனாய்வில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது! பாராட்டும் பொதுமக்கள்.
சிப்காட் காவல் துறையினர், ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் வாகன ஆய்வின் போது, மெத்தபெட்டமைன் என்கிற போதை பொருள் கடத்தப்படுவதை கண்டறிந்து, பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த கடத்தல்களுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பெங்களூருவில் தங்கி, துணை மருத்துவத்தில் கல்வி பயின்று வரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரும் பிடிபட்டனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், உலகளவில் இவற்றுக்குப் பின்னணியாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.








