Mathigiri Wall Collapse: Car, Motorcycle Damaged as Residents Raise Drainage Concerns | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Mathigiri Wall Collapse: Car, Motorcycle Damaged as Residents Raise Drainage Concerns

📅 வெளியீடு நாள்: 20-09-2026

📄 விளக்கம்

A compound wall reportedly collapsed near Sri Sudarshan Nagar in Mathigiri, Hosur, damaging a Tata Tigor car and motorcycle. An electricity pole also fell, reportedly disrupting power supply to nearby residents. Local residents and volunteers allege that accumulated drainage water contributed to the incident and are seeking answers from the Hosur Corporation.

ஓசூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கையால் சரிந்ததா இந்த மதில்? உயிர் தப்பிய நிலையில், "ஆணவம் இருக்கும் அளவிற்கு விவேகமும் இருக்க வேண்டும்", என எடுத்துரைக்கும் சுற்றுவட்டார பகுதி மக்கள்!

மத்திகிரியில் அமைந்துள்ளது ஸ்ரீ சுதர்சன் நகர் குடியிருப்பு பகுதி. இங்கே சுமார் 85 வீடுகள் உள்ளன. அருகே அமைந்திருப்பது டைட்டன் டவுன்ஷிப் மற்றும் இன்டஸ் லேண்ட் குடியிருப்பு பகுதி. இதில், இண்டஸ் லேண்ட் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி கிடைக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் மாநகராட்சி டைட்டான் டவுன்ஷிப் குடியிருப்போர் தொடுத்திருந்த வழக்கு முழுமை பெறாத நிலையில், துளிர் நகர் மற்றும் உட்ஸ் வேலி குடியிருப்பு பகுதி வடிகால் நீரை, டவுன்ஷிப் வழியாக எடுத்து வந்து, கேட்பாரற்று கிடந்த இன்டஸ் லேண்ட் குடியிருப்பு பகுதியில், முறையாக வடிகால் ஓடை கட்டமைப்பு ஏற்படுத்தாமல் மதில் அருகே, ஓசூர் மாநகராட்சி திறந்த நிலையில் விட்டுள்ளனர், என குற்றம் சாட்டுகின்றனர் டைட்டான் டவுன்ஷிப் பகுதி மக்கள்.

இதனால் மதில் அருகே நீர் ஓவர் லோடு ஆகி, மொத்தமாக மதிலை சரித்துள்ளது என கூறுகிறார் நம்மிடம் பேசிய, அப்பகுதியில் குடியிருக்கும் அக்னி ராஜ். இதில் மோட்டார் பைக் ஒன்று முழுமையாக இடர்பாடுகளில் மூழ்கியுள்ள நிலையில், அருகே நிறுத்தப்பட்டிருந்த டாட்டா டிகார் கார் முழுமையாக சேதமடைந்துள்ளது, என வருந்துகிறார் அதன் உரிமையாளரான ராஜேஷ்.

மும்முனை இணைப்பு கொண்ட மின் கம்பம் முழுமையாக முறிந்து, சரிந்துள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு இன்று விடிகாலை முதல் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த விபத்திற்கு ஓசூர் மாநகராட்சி ஆணையர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் ஓசூர் அனைத்து குடியிருப்பவர் நல சங்கங்களின் தலைவர் துரை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads