Kelamangalam Vinayagar Idol Immersion Point Lacks Preparation; Residents Seek Immediate Action | Hosur News Update - Video
Kelamangalam Vinayagar Idol Immersion Point Lacks Preparation; Residents Seek Immediate Action
📅 வெளியீடு நாள்: 17-09-2026
📄 விளக்கம்
Residents of Kelamangalam and surrounding areas near Hosur have raised concerns over the condition of the usual Vinayagar idol immersion point near the Sanathkumar River, also known as Chinnar. With more than 50 idols installed for Vinayagar Chaturthi, residents allege that garbage and human waste remain at the location and are urging Revenue and Panchayat officials to take immediate steps.
ஓசூர் அடுத்த கெலமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி வழிபட்டு வரும் நிலையில், நாளை விநாயகர் சிலைகளை வழக்கமாக கரைக்கும் சனத்குமார் நதி என்கிற சின்னாற்றின் பாலம் அருகே கரைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி குப்பைகள் மண்டி, மனித மலக்கழிவுகளும் மண்டி கிடப்பதாகவும், நம்பிக்கையுடன் வழிபட்ட விநாயகர் சிலைகளை எவ்வாறு அங்கே கரைப்பது என கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள். வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் இதில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? காத்திருக்கின்றனர் மக்கள்.








