Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் வக்கீல் லே அவுட் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ஓசூர் ராயக்கோட்டை சாலையில், சென்னத்தூர் அருகே அமைந்துள்ளது வக்கீல் லே அவுட், குடியிருப்பு பகுதி.  இந்த குடியிருப்பு பகுதிக்கு பின்புறம், அரசின் நிலம் உள்ளது.  இந்த நிலத்தை ஆக்கிரமித்த சிலர், வீடுகள் கட்டி, வாடகைக்கு விட துவங்கினர். 

ஆக்கிரமிப்பு குறித்த தகவல், ஒசூர் சார் ஆட்சியர், திருமதி பிரியங்கா அவர்களுக்கு கிடைத்தது.  இதை தொடர்ந்து கடந்த கிழமையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர், ஆக்கிரமிப்பாளர்களை, தாமாக வெளியேறுமாறு அறிவுறுத்தினார். 

சார் ஆட்சியரின் அறிவுறுத்தலை மீறி, ஆக்கிரமிப்பை தொடர்ந்ததால், இன்று காலை, புல்டோசர் உதவி கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: