₹30 Crore New Bus Stand Near Hosur Nearing Completion; Connectivity Concerns Raised | Hosur News Update - Video
₹30 Crore New Bus Stand Near Hosur Nearing Completion; Connectivity Concerns Raised
📅 வெளியீடு நாள்: 18-02-2026
📄 விளக்கம்
A new bus stand spread across 10 acres in Bathalapalli near Hosur has been constructed at an estimated cost of ₹30 crore. Designed to accommodate around 80 buses simultaneously, the facility aims to ease traffic congestion in the city. However, concerns have been raised regarding delays in the proposed 1.25-km flyover on the National Highway, adequacy of approach roads, and the durability of newly constructed drainage systems.
விரைவில் திறக்கப்பட இருக்கும் ஓசூர் புதிய பேருந்து நிலையம். ஓசூர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பத்தலபள்ளியில், புதிய பேருந்து நிலையம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.
30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இதில், ஒரே நேரத்தில் சுமார் 80 பேருந்துகள் நிற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பேருந்துகள் எளிதாக வந்து செல்வதற்கு, தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட வேண்டிய சுமார் ஒன்றேகால் கிலோ மீட்டர் மேம்பாலப் பணிகள் நத்தை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், போதிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போதிய Turning Radius அகலம் கொண்ட சாலை, அமைக்கப்படவில்லை என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
"தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்திய நிலங்கள் ஏன் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை?" என்றும், புதிதாக அமைக்கப்பட்ட வடிகால் ஓடைகளின் தரம் குறித்து தன்னார்வலர்களும் தொழில்முனைவோரும் கவலை வெளியிட்டுள்ளனர்.








