ஓசூர் பகுதியில், போதிய அளவிற்கு மழை கை கொடுத்ததால், வானம் பார்த்த பூமியில், விதைக்கப்பட்ட கேழ்வரகு பயிர், நல்ல விளைச்சலை கொடுத்துள்ளதாக, ஓசூர் உழவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், கேழ்வரகு, மக்களின் அடிப்படை உணவாக பயன்பட்டு வருகிறது. விளைவிக்கப்படும் கேழ்வரகு, பெரும்பாலும் வீட்டு உணவு தேவைக்காக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டு, மழை சரியாக பொழியாததால், கேழ்வரகு விளைச்சல் போதிய அளவிற்கு இல்லை. கிலோ ரூபாய் 40 முதல் 50 வரை விற்கப்பட்டு வந்தது. உணவு தேவைக்கு, உள்ளூர் மக்கள் கூடுதல் விலை கொடுத்து கேழ்வரகு வாங்க வேண்டிய சூழல் நிலவியல்.
இந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருப்பதால், விலை குறையும் என, வாங்கி பயன்படுத்தும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.








