Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் யானையின் உடல் கண்டுபிடிப்பு.

ஓசூரை அடுத்த, உரிமம் காட்டுப்பகுதியில், நாற்றம் அடிப்பதை, ஆடு மாடுகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஊர் மக்கள், கவனித்துள்ளனர். 

எந்தப் பகுதியில் இருந்து நாற்றம் அடிக்கிறது என, தொடர்ந்து தேடி, யானை ஒன்று இறந்து, அழுகிய நிலையில் உடல் கிடப்பதை கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர், திருமதி கார்த்திகேயனி தலைமையிலான வனத்துறையினர், யானை இறந்து கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். 

கால்நடைத்துறை மருத்துவர்களின் உதவியுடன், உடற் கூர் ஆய்வு செய்து, யானையின் இறப்பு குறித்து தீவிரமாக வினவி வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: