Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு, இன்று மழை, நோய் பரவும் அபாயம்!

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை காலை வேளையில், கடுமையான பனிப்பொழிவு இருந்தது. 

குறிப்பாக, ஓசூர் புறநகர் பகுதியில், காலை நேரத்தில் வேலைகளுக்கு செல்பவர்கள் இதனால் பாதிப்படைந்தனர்.  வண்டி ஓட்டுபவர்களுக்கு, எதிரில் வரும் வண்டிகள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடமாட்டம் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு, பனிமூட்டம் சாலையை மறைத்து நின்றது. பெரும்பாலான மக்கள், காலை 8 மணி வரை, வெளியில் வருவதை தவிர்த்தனர்.  

இன்று, செவ்வாய்க்கிழமை காலை ஐந்து முப்பது மணியில் இருந்து, மழை சாரல் பொழிந்து வருகிறது. 

தொடர்ந்து மாறி வரும் வானிலை மாற்றத்தால், மூச்சு கோளாறு உள்ளவர்களும், வயது முதிர்ந்தவர்களும், பள்ளி செல்லும் சிறார்களும், குழந்தைகளும், உடல்நலம் பாதிப்பு அடைவதாக, தன்னார்வலர்கள் கூறுகின்றனர். 

வானிலை மாற்றம் தொடர்பாக மருத்துவர் ஒருவரிடம் கருத்து கேட்ட பொழுது, பொதுமக்கள், வீட்டின் அருகே மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காதபடி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், கொசுக்கடியில் இருந்து முதியவர்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும், நோய் தொற்று ஏற்பட்டால், மருந்தகங்களில் நோய் அறிகுறிகளை கூறி மருந்து வாங்காமல், முறையான மருத்துவர்களை கலந்தாலோசித்து மருந்து உட்கொள்ள வேண்டும் அறிவுரை கூறினார்.  வானிலை மாற்றம் தொடர்வதால், முடிந்த வரை, அசைவ உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது எனவும் கருத்து தெரிவித்தார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: