ஓசூர் பன்னிரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், நேதாஜி பூங்கா, பகுதிகளில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் ஓடை, குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர, மாமன்ற வார்டு உறுப்பினர் திருமதி பெருமாயி, ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா அவர்களிடம், கோரிக்கை வைத்திருந்தார்.
அதை தொடர்ந்து கடந்த நாள், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள், கள ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அவர் கள ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, அவருடன், மாமன்ற வார்டு உறுப்பினர் திருமதி பெருமாயி, அருள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.








