Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் 100 கிலோ கேக்குடன் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவக்கம்!

ஓசூரில், சுமார் 100 கிலோ கேக் செய்வதற்கு ஆயத்த நிகழ்வாக மிக்சிங் திருவிழா, கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள, நட்சத்திர விடுதியில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. 

இதில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நட்சத்திர விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ், தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில், கேக் செய்வதற்கான பணிகள் இப்பொழுதே கொண்டாட்டங்களுடன் தொடங்கி விட்டது. 

அந்த வகையில், ஓசூரில் உள்ள நட்சத்திர ஒட்டலில் 100 கிலோ எடையிலான கிறிஸ்துமஸ் கேக் செய்ய கேக் மிக்சிங் திருவிழா கடந்த நாள், செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் அன்று நடைபெற்றது. ஒட்டல் உரிமையாளர் சந்தானம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூரை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியோர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மிக்சிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கிசன், வால்நட் உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களை தலைமை சமையல் கலைஞர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து கேக் செய்ய மிக்சிங் செய்தனர். 

அப்போது அனைவரும் ஆரவாரம் செய்து உலர் பழங்களின் மீது ஒயின் மற்றும் பழ சாருகளை ஊற்றி மகிழ்ச்சியுடன் மிக்சிங் பணிகளில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் உடைகள் அணிந்த சிறார்கள், மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் ஆரோக்கியராஜ், முதன்மை நிர்வாக அலுவலர் குளோரி பிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: