Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மக்களே, leptospirosis நோய் தொற்று ஏற்படலாம்: எச்சரிக்கை

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளும், நாய்களும் ஓசூரை பொறுத்தவரை ஒரு பொதுவான காட்சியாக மாறியுள்ளது. இவ்வாறு திரியும் விலங்குகள், பல நேரங்களில் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களின் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவுகள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, தொற்று நோய்களின் பரவல், பெரிய அளவிலான ஆபத்தான இடர்பாடாக வடிவெடுத்து வருகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளும் நாய்களும் ஏற்படுத்தும் தொற்று நோய்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் தாக்கங்களையும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆராய்வோம். 

மாடுகள் மூலம் ஏற்படும் நோய்கள் குறித்து முதலில் தெரிந்து கொள்ளலாம்.  தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள், பொதுவாக குப்பை மற்றும் கழிவுகளை உணவாக சாப்பிட்டு, சாக்கடை மற்றும் குப்பை மேடுகளில் உணவு தேடி அலைகின்றன. இந்த மாடுகள், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு தொற்று நோய்களை பரப்பும் வாய்ப்பு உள்ளதாக, மருத்துவர்கள், அதிலும் குறிப்பாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாடுகளின் மூலமாக ஏற்படும் ஒரு ஆபத்தான நோய் லெப்டோஸ்பைரோசிஸ் ஆகும். இந்த நோய், மாடுகளின் சாணி, சிறுநீர் மூலமாக, கிருமிகள் மண்ணிலும், நீரிலும் கலக்கின்றன. நிலத்துடன் தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு, இந்த நோய் மிக வேகமாக பரவுகிறது. இதில் காய்ச்சல், தலைவலி, சோர்வு, குருதியில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கண்டறிய, டார்க் ஃபீல்டு மைக்ரோஸ்கோப், போன்ற விலை உயர்ந்த கருவிகள் தேவை இருப்பதால், ஏழை எளியவர்களுக்கு, நோய் தொற்று கண்டறியப்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள், பல நாட்கள் மருத்துவமனையில் முடங்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.

கேம்பிலோபாக்டர் நோய், மாடுகளின் சாணி மற்றும் சிறுநீர் மூலம் பரவுகிறது. வயிற்று வலி, வாந்தி, சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உடனே வெளிப்படக்கூடியவை.

Brucellosis, நோய், மாடுகளின் பால் அல்லது பால் பொருட்கள் மூலம் பரவக்கூடியது. தெருவில் சுற்றித் திரியும் மாடுகளில் இருந்து பெறப்படும் பாலின் கிருமிகள், மனிதனுக்கு நேரடி தாக்கம் ஏற்படுத்துகின்றன. காய்ச்சல், தசை வலி, உடல் சோர்வு போன்றவை இந்நோயின் முதன்மையாக விளைவுகளாகும். மாடுகளின் உடலில் காணப்படும் உன்னிகள், மனிதர்களுக்கு சிக்கியால், Lyme Disease போன்ற நோய்களை பரப்புகின்றன. மாடுகளும் மனிதனும் உணவு தொடர்பில் இருப்பதால், நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் உள்ளன.  ஓசூர் மாநகராட்சி, உடனடி நடவடிக்கையாக, தெருவில் குப்பை கழிவுகளை தின்று சுற்றித் திரியும், மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்தி, நோய் பரவல் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தெரு நாய்கள் மனிதர்களுக்குத் தொற்றுநோய்களை ஏற்படுத்துவதில் மாடுகளுக்கு இணையாக செயல்படுகின்றன. ஓசூரை பொறுத்தவரை, சுமார் 45 ஆயிரம் தெரு நாய்கள் சுற்று திரிவதாகவும், மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் கிருமிகள் வேகமாக பரவுகின்றன.

நாய்களால் ஏற்படும் மிகவும் கொடூரமான நோய் ரேபிஸ் ஆகும். இது நாய்களின் கடிக்கு பின், அவைகளது உமிழ்நீரில் இருந்து, virus எனப்படும் தீநுண்ணி மனிதர்களுக்கு நேரிடையாக பரவுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டவர்கள், அதனால் மரணிப்பது உறுதி. இதைத் தவிர்க்க, நாய்கள் முறையான தடுப்பூசிகள் பெற்றிருக்க வேண்டும். 

தெரு நாய்களால் round worms எனப்படும் வயிற்றுப்புழு, ஹூக் வோர்ம்ஸ் போன்ற பூச்சிகளின் தாக்கம் ஏற்படக்கூடும். இந்த நோய்கள், குழந்தைகளிடம் மிகவும் வேகமாக பரவும் தன்மையுடையவை. சாலைகள், மண் மற்றும் சாலை ஓரங்களில், முறையான காலணி இல்லாமல், நடமாடும் குழந்தைகளுக்கு, இந்த நோய் தொற்று எளிதில் ஏற்பட்டு விடும். 

ஸ்கேபிஸ் எனப்படும் சொறி சிரங்கு, நாய்களின் தோலில் காணப்படும் பூச்சிகள், மனிதர்களின் தோலின் மீது பரவி, அதனால் அரிப்பு மற்றும் முடி கொட்டுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

Salmonellosis தெரு நாய்களின் மலம் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. இதனால் காதின் உள் குருத்து கோளாறுகள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.

டென்மிக் நோய்கள், லீஷ்மேனியாசிஸ் போன்றவை, தெரு நாய்களால் எளிதில் மனிதர்களுக்கு தாக்கம் அளிக்கின்றன.

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளும், தெரு நாய்களும் சமூக நலங்களுக்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விலங்குகள் குப்பைகளை ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு நகர்த்தி, கழிவுகளை ஆங்காங்கே கழிந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.

குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உயிருக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்துகின்றன. நோய் தொற்று பெருமளவில் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைவான முதியோருக்கும் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

தெரு நாய்களையும், கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளையும், ஓசூர் மாநகராட்சி உடனடியாக சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  உரிமை கோரப்படும் தெரு நாய்கள் மற்றும் சாலையோர மாடுகளை கண்டறிந்து, அவற்றிற்கு முறையான தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும். இது பல்வேறு தொற்று நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தும்.

சாலையோரங்களில் குப்பைகளை, குறிப்பாக வீட்டில் மீதமான உணவுப் பொருட்களை வீசி செல்லும்,  நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான தண்டத்தொகை விதித்து, சாலையோரங்களில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளிக்கும் பழக்க வழக்கத்தை தடுக்க வேண்டும். 

விளம்பரத்திற்கு என்று செயல்படாத உண்மையான தன்னார்வலர்களையும், பணம் ஈட்டும் நோக்கமின்றி செயல்படும் சமூக அமைப்புகளையும் ஓசூர் மாநகராட்சி கண்டறிந்து, அவற்றின் வாயிலாக, தெருக்களில் சுற்றித் திரியும் நாய் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக அமைப்புகள் தெரு நாய்கள் மற்றும் மாடுகளுக்கான தற்காலிக முகாம்கள் அமைத்து, அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்கள் தொடர்பான இடர்பாடுகள் சமூக நலத்திற்கு பெரும் சவாலாக உள்ளன. இந்த விலங்குகளின் செயல்பாடுகளை சரியாக கண்காணித்து, முறையான தீர்வுகளை முன்னெடுத்தால், தொற்று நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்கள் உடல் நலத்துடன் வாழவும், சுற்றுச்சூழல் தூய்மையாகவும் இருக்கும், என்கின்றனர் மருத்துவர்கள்.




Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: