Two Injured After Slipping on Rock During Shivaratri Festival at Bevanatham Hill Temple | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Two Injured After Slipping on Rock During Shivaratri Festival at Bevanatham Hill Temple

📅 வெளியீடு நாள்: 16-02-2026

📄 விளக்கம்

Heavy crowds were reported at the Bevanatham hilltop Shiva temple near Denkanikottai during Shivaratri celebrations. The temple, located on a steep rock surface, requires devotees to use iron railings while climbing. Despite police deployment and ambulance arrangements, two devotees reportedly slipped and sustained injuries. They were rescued and admitted to hospital. Authorities had advised devotees to follow safety instructions.

மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய பேவநத்தம் சிவராத்திரி விழா. பாறையில் இருவர் வழுக்கி விழுந்து படுகாயம் எனவும், அதில் ஒருவர் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் எனவும், உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்.

தேன்கனிக்கோட்டை அருகே காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஊர் பேவநத்தம். அங்கு மலை மீது, "சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோவில்" உள்ளது.

செங்குத்தான பாறை மீது கோவில் அமைந்திருப்பதால், படிகள் அமைப்பதற்கு போதிய வாய்ப்பில்லை. இதனால், பாறைகள் மீது பொருத்தப்பட்டுள்ள இரும்புக் குழாய் கைப்பிடிகளை பிடித்து மலையில் ஏறி இறங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, ஏராளமான காவல் துறையினர், போதிய பேருந்து மற்றும் அவசர மருத்துவ தேவைக்கு ஏராளமான ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

இரும்பு குழாய் கைப்பிடிகளை பிடித்துத்தான் மலையில் ஏறி, இறங்க வேண்டும் என காவல்துறையினர், பொதுமக்களை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads