Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மாநகராட்சியின் வரிவிதிப்பில் சலுகைகள்!

ஓசூர் மாநகராட்சி, வரிவிதிப்பு குழு கூட்டம், அதன் தலைவர் சென்னீரப்பா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் Shrikanth, துணை ஆணையர் டிட்டோ மற்றும் வரிவிதிப்புக்குழு மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் வரி வருவாய் தொடர்பாக பல தீர்மானங்களை முன்மொழிந்தார்.  அவற்றில் குறிப்பிடும்படியாக,

வீடு கடை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு, வரி விதிக்கப்பட வேண்டிய இனங்கள் பல உள்ளதால், அனைத்து தரப்பினருக்கும் புதிய வரி விதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

குப்பை வரி திட்டத்தில், 2024 2025ஆம் ஆண்டுக்கு மட்டும், வரி முடிவு எடுக்க வேண்டும். 

கட்டிடங்களுக்கு வரி விதிக்கும் பொழுது, படிக்கட்டு, Portico போன்றவற்றிற்கு வரி விதிக்காமல், உண்மையான பயன்பாட்டில் உள்ள பகுதிக்கு மட்டும், வரி விதிக்க வேண்டும். 

பள்ளி கட்டடங்களுக்கு வரி விதிக்கும் பொழுது, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிபாடு நடத்தும் பகுதிக்கு, அதாவது Prayer Hall என்று ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு, வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும். 

ஒரே கட்டடத்தில் உள்ள பல வீடுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே வரி விதிப்பு எண் வழங்க வேண்டும்.  இதை நடைமுறைப்படுத்தினால், அனைத்து கதவு எண்களும், ஒரே ரசீதில் வரும். அதனால் குப்பை வரி செலுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறையும். 

வரி வசூல் பிரிவில் போதுமான ஊழியர்கள் இல்லாததால், வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டு, மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வார்டு வாரியாக, மாநகராட்சி தொடர்பான அனைத்து துறை ரீதியான, குறைதீர் முகாம் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இணைய வழி புதிய வரி விதிப்பினை செயல்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  இணைய வழியில், வரி செலுத்துவதற்கு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என தீர்மானங்களை, மாமன்றத்தில் முன் வைத்தார்.

தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், வரிவிதிப்பு தொடர்பாக உங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையாளர், கூட்டத்தின் வாயிலாக வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும், ஆய்வு செய்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.



Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: