Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் வனத்துறையினர், நாட்டின் முதன்மையான போர்க்களத்தில்!

ஓசூர் வனத்துறையினர், மனிதர்களையும் இயற்கையையும் காப்பாற்றும் காவலர்கள். நமது நாட்டின் எல்லைகளில், ராணுவ வீரர்கள், உயிர் நிமிர்ந்து நாட்டை பாதுகாத்து வருகின்றனர். அதே நேரத்தில், ஓசூர் வனத்துறையினர், நாட்டின் மற்றொரு முதன்மையான போர்க்களத்தில், அதாவது, மனிதர்களுக்கும் இயற்கைக்குமான மோதல் போக்கில், சமநிலையை ஏற்படுத்தி, பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். வனத்துறையினரின் கடமை மிக உயர்ந்தது. அவர்கள் தனித்துவமான தொண்டினை ஆற்றுவதால், நாடும் அதன் உயிரினங்களும், காடும் அதன் உயிரினங்களும், மோதல் போக்கின்றி பாதுகாப்புடன் வாழ்கின்றன.  

ஓசூர் வனத்துறையினரின் பணிகள் பலவகையானவை. முதன்மையாக, அவர்கள் ஓசூர் காடுகளை பாதுகாக்கும் பொறுப்பு உடையவர்கள். பசுமை வளங்களை சேமித்து, சுற்றுச்சூழல் சீர்குலைவதை தடுப்பதற்காக, அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள். காட்டு விலங்குகள், குறிப்பாக யானைகள், சிறுத்தைகள் அடிக்கடி மனிதர்களின் வாழ்விடம் நுழைவதும், மனிதர்கள் காட்டு விலங்குகள் வாழும் இடங்களை ஆக்கிரமிப்பதும், நாளொரு பொழுதும் அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்-விலங்கு மோதல்கள் பெருகி வருகின்றன. இதை சமாளிக்கவும், உயிரினங்களை பாதுகாக்கவும், ஓசூர் வனத்துறையினர் முனைந்துள்ளனர்.  

வனத்துறையினரின் பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெறுகின்றன. காட்டுத்தீ, மரம் வெட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல், விலங்குகள் மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களை வேட்டையாடுதல், போன்ற மோதல்களை தடுப்பதற்காக, அவர்கள் அயராது உழைக்கின்றனர். காடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டால், ஏராளமான உயிரினங்கள் உயிரிழக்கும். இதன் தாக்கம் மானுட சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரழிவாக முடிகிறது. இதை தடுக்க வனத்துறையினர் இரவில் ஆளில்லாத காட்டுகளில் சென்று கண்காணிக்கிறார்கள்.  

மனிதருக்கும் விலங்குகளுக்குமான மோதல் போக்கை தடுக்கவும், காடுகளில் உள்ள இயற்கையை மனிதன் அழிக்காத வகையில் பாதுகாக்கவும், வனத்துறையினர் இரவு நேரங்களிலும், அடர்ந்த காட்டுப் பகுதிகளில், ஓசூர் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.  அவர்களுக்கு, காட்டு விலங்குகளால் ஏற்படும் ஆபத்தை காட்டிலும், காட்டை சூறையாடத் துடிக்கும் மனிதர்களால் ஏற்படும் ஆபத்து பெரிது. இவற்றையெல்லாம் தாண்டி, அவர்கள் தங்கள் பணியை உறுதியாக செய்கிறார்கள்.  

இதைச் சரி பார்க்கும் போது, வனத்துறையினரின் பங்களிப்பு, நாட்டை வலுப்படுத்தும் மற்ற துறைகளின் பணிகளை காட்டிலும் முதன்மை வகிக்கிறது. அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம், மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரங்களை நிலைத்துவமாக வழங்குகின்றனர். தண்ணீர் வளங்கள், காற்றின் தூய்மை, காடுகளின் அழகியல், பசுமை வளம் போன்றவை அனைத்தும் காடுகளின் வழியே கிடைக்கின்றன.  

இந்நிலையில், ஓசூர் வனத்துறையினரின் உழைப்பையும், தியாகத்தையும் நாம் மரியாதை செய்ய வேண்டும். காட்டுப்பகுதிகளில் வாழும் சமூகங்களின் வாழ்க்கையையும், பாதுகாப்பதற்காக, அவர்களால் செய்யப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மேலும், வனத்துறையினரின் பணிகளை எளிதாக்க, நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விலங்குகளை வெட்டுபவர்கள், மரங்களை வெட்டுபவர்கள், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்கள், ஆகியோரை அடையாளம் கண்டு, உடனுக்குடன் வனத்துறையினருக்கு, தகவல் கொடுப்பது நமது முதன்மையான கடமை என, நாம் உணர வேண்டும். வனத்துறையினருக்கு நம்மால் ஆன உதவிகளை, செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். 

வனத்துறையினர் செய்யும் பணிகள் கண்ணுக்குத் தென்படாததாக இருப்பினும், அதன் தாக்கம் மிகப்பெரியது. ஒரு சிறிய மரம் வளர, பல ஆண்டுகள் ஆகும்; ஆனால் அது தரும் நன்மைகள் தலைமுறைகளுக்கு நீடிக்கும். இதையே நினைத்து வனத்துறையினரின் சேவையை மதிக்க வேண்டும். மனிதன் மற்றும் இயற்கை இடையே பாலமாக செயல்படும் அவர்களுக்கு ஓசூர் பொதுமக்களின் சார்பில் ஓசூர் ஆன்லைனில் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றி என்றும் கடமைப்பட்டதாக இருக்க வேண்டும்.  

வனத்துறையினரின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துவோம்!

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: