Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் பள்ளி குழந்தைகளுக்கு, வேகாத உப்புமா!

ஓசூரில் பள்ளி குழந்தைகளுக்கு, வேகாத உப்புமா! தலைமை ஆசிரியர்கள் வேதனை.  ஓசூர் மாநகராட்சி சார்பில், தரமற்ற உணவுகள், காலை உணவாக மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவதாக, கடந்த நாள் நடைபெற்ற, கல்வி குழு கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.  ஆண்டு முழுவதும், மூன்று காய்களை வைத்து, ருசியின்றி உணவு சமைக்கப்படுவதால், மாணவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர், என தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தார். 

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகர கல்வி குழு தலைவர், Sridhar தலைமையில், ஓசூர் மாநகரில் உள்ள, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற, தலைமையாசிரியர் ஒருவர், தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான, பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்படும், உணவு குறித்து கருத்து கூறும் பொழுது, உணவை சரியாக வேக வைப்பது இல்லை. கெட்ட நாற்றம் அடிக்கிறது. தரமற்ற நிலையில் உள்ளது. ருசியும் சரியில்லை. ஏதோ கலப்படம் செய்தது போன்று உள்ளது, என மாநகராட்சியின் கல்விக் குழு கூட்டத்தில் தெரிவித்தார். 

நாள் ஒன்றுக்கு, 37 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும், சுமார் 6800 பள்ளி சிறார்களுக்கு, காலை உணவு மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.  இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தனியார் மூலமாக, ராயக்கோட்டை சாலையில் உள்ள சானசந்திரம் அருகே,  ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்து, காலை உணவு, சமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும், தனித்தனியாக காலை வேளைகளில் சமையல் செய்ய வைப்பதும், அதை மேற்பார்வை இடுவதும், இடர்பாடான ஒன்று, என கருதி, ஒருங்கிணைந்த சமையல் கூட்டத்தை, ஓசூர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர். 

கூட்டத்தில் பங்கேற்ற தலைமையாசிரியர்கள் பலர், பள்ளி மாணாக்கர்களுக்கு, காலை உணவு திட்டத்தின் கீழ், தரமான மற்றும் ருசியான உணவு, போதுமான கழிவறை வசதி, தேவைக்கு ஏற்ப வகுப்பறை கட்டமைப்பு, மின்சார வசதி உள்ளிட்ட தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். 

மாநகர கல்வி குழு தலைவர், Sridhar, தலைமை ஆசிரியர்களின் கருத்துக்களை, கூர்ந்து கவனித்து கேட்டுக்கொண்டார்.  மாநகராட்சி அலுவலர்களிடம், காலை உணவு சமைக்கும் ஒப்பந்ததாரரிடம் சரிசெய்ய வலியுறுத்தினார். 

ஆசிரியர் ஒருவர் ஓசூர் ஆன்லைனிடம், மாநகர கல்வி குழு தலைவர், Sridhar, குறித்து கருத்து கூறும் பொழுது, கல்வி குழு தலைவர், ஏற்கனவே பல பள்ளிகளுக்கு, தொழிற்சாலைகளின் CSR பணம் மூலமாக, பல வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், மாநகராட்சி கூட்டத்தில், தாங்கள் கூறிய கருத்துக்களை ஏற்று, அதற்கு சரி செய்யும் நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார், என தாங்கள் நம்புவதாக கூறினார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: