Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் அமித் ஷா உருவப்படம் எரித்து, பதவி விலகக் கோரி சாலை மறியல்.

ஓசூரில் அமித் ஷா உருவப்படம் எரித்து, பதவி விலகக் கோரி சாலை மறியல். நக்கலான முகபாவனையை வைத்துக் கொண்டு, கேலி பேசும் விதத்தில், இந்திய ஒன்றிய அரசின், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், நாடாளுமன்றத்தில், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தியதாக, நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சி அலை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று ஒசூர் காந்தி சிலை அருகே, அமித் ஷாவை கண்டித்து, அமித் ஷாவின் படத்தை எரித்து, சாலை மறியல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். 

நாடாளுமன்றத்தில், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த கலந்துரையாடலின் போது, அம்பேத்கர் குறித்து குறிப்பிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரின் பெயரை குறிப்பிடுவதை காட்டிலும், கடவுள் பெயரை குறிப்பிட்டால், ஏதாவது பயன் கிடைக்கும் என்கிற வகையில், சட்ட மாமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், ஒசூரில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ஓசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தலைமையில் ஓசூர் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அமித் ஷா உருவப்படத்தை விசிகவினர் நெருப்பு வைத்து கொளுத்தினர்.  இதை கண்ட காவல்துறையினர், உடனடியாக அதை தடுத்து நிறுத்தினர். விசிகவினர், ஒசூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே, ஓசூர் மகாத்மா காந்தி சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: