ஓசூரில் அதிமுக நிறுவனர், தமிழக முன்னாள் முதல் அமைச்சர், எம் ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஓசூரில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம், மற்றும் ஓசூர் ராயக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் உள்ள எம் ஜி ஆர் சிலை, ஆகிய இடங்களில் எம் ஜி ஆர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா மற்றும் ஓசூர் மாநகர அ தி மு க பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து ஓசூர் தேர்பேட்டை பகுதியில், எம் ஜி ஆரின் படத்திற்கு மலர் தூவி தொண்டர்கள் மரியாதை செய்தனர். வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ தி மு கவை, ஆட்சியில் அமர்த்த, தொண்டர்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என அனைவரும் உறுதி ஏற்றனர்.








