ஓசூர் பகுதியில், மங்கி குல்லா கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் நகர் பகுதியில், வைகறை பொழுதில் அட்டகாசம் செய்து வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள், ஓசூர் மத்திகிரி கூட்டு ரோடு அடுத்த, கெலமங்கலம் சாலையில் உள்ள குருப்பட்டி, அச்சட்டி பள்ளி, ஜொனபெண்டா ஆகிய பகுதிகளை ஒட்டிய, புதிய குடியிருப்பு பகுதிகளாக அடையாளம் கண்டு, அப்பகுதிகளில் கொள்ளை நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
மங்கி குல்லா அணிந்து கொள்ளையை நடத்தும் இந்த கும்பல், வீடுகளின் கதவை உடைத்து, உள்ளே புகுந்து திருடும் வாடிக்கையை கொண்டுள்ளனர். இவர்கள், கார்களில் வந்திறங்கி, தங்களது கொள்ளை திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மூன்று மற்றும் எட்டாம் நாள், சிகப்பு நிற சான்ட்ரோ காரில் வந்திறங்கி கொல்லையில் ஈடுபட்ட இவர்கள், கடந்த டிசம்பர் 23ஆம் நாள், Renault Duster காரில் வந்திறங்கி கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த கொள்ளை கும்பலில், நான்கு உறுப்பினர்கள் இருப்பதாகவும், எல்லா கொள்ளை நிகழ்வுகளிலும், இந்த நால்வரும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.
மங்கி குல்லா கொள்ளையர்கள், நவம்பர் 15 ஆம் நாள் வாக்கில், ஓசூர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து, தொடர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொள்ளையர்கள், ஓசூரில் குளிரை தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, வைகறை பொழுதை, தேர்வு செய்து செயல்படுகின்றனர்.








