Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் நகை கடையில், செல்ஃபி எடுத்து, ரசிகர்களுடன் நடனமாடி கும்மாளமிட்ட நடிகை

ஓசூர் நகை கடையில், செல்ஃபி எடுத்து, ரசிகர்களுடன் நடனமாடி கும்மாளமிட்ட நடிகை.  நடிகை Shri Leela,  தெலுங்கு படங்களான புஷ்பா இரண்டு மற்றும் குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்தவர்.  அவர் ஓசூர் வருகிறார் என்கிற செய்தியை அறிந்து, ஏராளமான ஜொள்ளர்கள், காலை முதலே, ஜுவல்லரி முன்பு குவியத் துவங்கினர். 

ஓசூர் பேருந்து நிலையம் அருகே, கல்யாண் ஜூவல்லரியின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த கடையை திறப்பதற்கு, புஷ்பா 2 மற்றும் குண்டூர் காரம் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள, தெலுங்கு நடிகையான Shri Leela வருகை தரவிருக்கிறார், என்கிற செய்தியை அறிந்து, அவரை காண, அறுபது வயதை கடந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக, சாலை ஓரங்களில் நின்று காத்திருந்தனர்.

கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகை Shri Leela, அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, ரசிகர்களிடம், நலமாக உள்ளீர்களா? என கலகலப்பாக கலந்துரையாடி, பாடல்களுக்கு நடனம் ஆடினார். அதனை தொடர்ந்து, மேடையில் நின்றவாரே, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். அப்போது ரசிகர்கள், அவருக்கு மிகப்பெரிய புகைப்படம் ஒன்றை பரிசளித்தனர். தெலுங்கு நடிகையை காண அப்பகுதியில் ஏராளமானவர்கள் கூடினர். அவரைப் பார்க்க ஏங்கி நின்றவர்கள், அவரவர் திறனுக்கு ஏற்ப, நடிகையை, தங்களது கைபேசி கேமரா கொண்டு போட்டோ, வீடியோ எடுத்து கொண்டனர். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: