ஓசூரில் நடைபெறும் இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையேயான எறி பந்து போட்டி. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த வீரர்களுக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு.ஓசூரில் ஆசியன் த்ரோபால் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு த்ரோபால் அசோசியேசன் சார்பில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையேயான த்ரோபால் எனப்படும் ஏறி பந்து போட்டிகள், இன்று நடைபெற உள்ளது.
ஓசூரில் உள்ள பொறியியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த எறி பந்து போட்டிகளில் இலங்கையை சேர்ந்த 32 வீரர், வீராங்கனைகளும், இந்தியாவை சேர்ந்த 32 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த நிலையில் கடந்த நாள் இரவு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா இலங்கை நாடுகளை சேர்ந்த 64 வீரர் வீராங்கனைகள் ஓசூருக்கு வருகை தந்தனர். அப்போது அவர்களை த்ரோபால் பெடரேஷன் மற்றும் அசோசியேசன் அமைப்பை சேர்ந்தவர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது வீரர்களுக்கு பரிசுகளை வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த போட்டியில் சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த எறி பந்து போட்டிகளை இன்று தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.








