Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் குளிரில் நடுங்கிய நாகப்பாம்பு, வீட்டுக்குள் புகுந்தது

ஓசூர் குளிரில் நடுங்கிய நாகப்பாம்பு, வீட்டுக்குள் புகுந்தது.  வீட்டினுள் இருந்தவர்கள், வீட்டை விட்டு வெளியேறி, குளிரில் நடுங்கியபடி, பாம்பு பிடி வீரரை உதவிக்கு அழைத்தனர்.  ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடுமையான குளிர் நிலவி வருவதால், பாம்பு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், குளிரில் நடுநடுங்கி வருகின்றன.  இதனால், வெப்பமான இடம் தேடி இங்கும் அங்குமாக அலைகின்றன. பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட அனைத்தும், ஓசூரில் நிலவி வரும் கடுங்குளிரை தாங்க இயலாத சூழலில், மனிதர்கள் குடியிருக்கும் வீடுகள் அவற்றிற்கு குளிருக்கு இதமான புகலிடமாக திகழ்கிறது. 

ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளி ஊரில் உள்ள ஒரு வீட்டிற்குள் கொடிய நச்சுத்தன்மை கொண்ட நாகப்பாம்பு புகுந்துள்ளது. நாகப்பாம்பை பார்த்த வீட்டில் உரிமையாளர், அந்த பாம்பை அக்கம் பக்கத்தின உதவியுடன் விரட்ட முயன்றுள்ளார். அந்த பாம்பு, வெளியில் குளிர் என்பதால், போக மறுத்து வீட்டில் உள்ளேயே ஓரிடத்தில் மறைவாக தங்கி விட்டது. 

இதனால் அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர்பாம்பு பிடி வீரரை உதவிக்கு அழைத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர், வீட்டிற்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பை, அதற்கான கருவிகள் மூலம் பிடித்துள்ளார். பின்னர் அந்த நாகப்பாம்பை, சாக்கு பையில் அடைத்து ,அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விடுவித்துள்ளார். 

வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.  ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான குளிர் நிலவி வருவதால், குளிரை தாங்காத பாம்பு, பூரான், மற்றும் தேள் போன்ற உயிரினங்கள், குளிருக்கு இதமான வெப்பமுள்ள மனிதர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் புகுந்து தஞ்சம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: