Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சிறைபிடிப்பு

ஓசூரில் ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சிறைபிடிப்பு. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள், இரவு நேரத்தில், ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த, இரண்டாம் ஆண்டு மாணவி, காவல்துறையின் பதிவேடு குற்றவாளியால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தமிழ்நாடு முழுவதும், பெற்றோர்கள் மற்றும் மாணவிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. 

அந்தப் பதிவேடு குற்றவாளி, ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவரின் பிறந்தநாளுக்கு, அண்டாவில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் என்றும் தகவல்கள் வருகின்றன, ஒருபுறம் குற்றச்சாட்டும், மறுபுறம் மறுப்பும், என அரசியல் மோதல்கள் நடந்தேறி வரும் சூழலில், குற்றவாளிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவம் பெற்று வருகிறார்.  அண்ணா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை, அதன் மேலாண்மை முழுக்க முழுக்க, தமிழ்நாடு ஆளுநர் R N ரவி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. 

இதற்கிடையே, ஓசூரை பொறுத்தவரை, ஆர்ப்பாட்டங்கள் எதற்கும் காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில், ராயக்கோட்டை சாலை மின்வாரிய அலுவலகம் அருகே, மேடை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காவல்துறையினர் இவர்கள் அனைவரையும், பேருந்துகளில் ஏற்றி, அழைத்துச் சென்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: