Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இரவு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

ஓசூரில், சென்னை, மும்பை நகரங்களுக்கு ஒப்பாக புத்தாண்டு பிறப்பை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இரவு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்த ஓசூர் மக்கள்.  பொதுவாக, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில், நட்சத்திர விடுதிகளில், மக்கள் விடிய விடிய ஆட்டம் பாட்டம் என புத்தாண்டு வருகையை கொண்டாடுவதை செய்திகளில் கண்டிருக்கிறோம். 

கொரோனா பொது முடக்கத்திற்கு பின்பு, இந்த ஆண்டு, 2025 பிறப்பை, வண்ணமயமான ஒளி கற்றைகள், ஆங்காங்கே சீறிப்பாய, வானில் பட்டாசுகள் வெடித்து சிதற, ஓசூரின் நடுங்கும் குளிரில், பகுதியே வெப்பமயமாகும் அளவிற்கு, இசைகளுக்கு ஏற்ப நடனமாடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என, விடிய, விடிய, கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஓசூரின் ஒரு பகுதி மக்கள் இவ்வாறு புத்தாண்டை வரவேற்ற நிலையில், மற்றொருபுறம், கோவில்களுக்கும், ஆலயங்களுக்கும் சென்று, இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய, பக்தியுடன், மக்கள் இது காலை முதல் வழிபட்டு வருகின்றனர்.  பெரும்பாலான வழிபாட்டு இடங்களில், சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்து வருகிறது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: