ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் ஆகியோர் 22 ஆவது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் வழங்கி துவக்கி வைத்தனர். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மற்றும் ஓசூர் மாநகர் மேயர் எஸ் ஏ சத்யா, ஆகியோருடன் துணை மேயர் ஆனந்தையா, பகுதி வார்டு உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரன், திமுக பொறியாளர் அணி மாநில இணை செயலாளர் ஞானசேகரன், திராவிட கழக மாவட்ட செயலாளர் வனவேந்தன் உள்ளிட்ட ஏராளமானவர்கள், சில வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்கினர்.
தமிழகத்தில் குடிமை பொருள் வழங்கல் கடைகள் மூலம், பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் குடிமை பொருள் வழங்கல் கடை ஊழியர்கள் மூலம் ஓசூர் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஓசூரில் 22 வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வரர் நகர் பகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களை வழங்க வந்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மற்றும் மேயர் சத்யா ஆகியோர், அங்குள்ள குடிமை பொருள் வழங்கல் கடையில் அரிசி பருப்பு, தரமாக உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது பொது மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
பின்னர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மற்றும் ஓசூர் மாநகர் மேயர் எஸ் ஏ சத்யா ஆகியோருடன் துணை மேயர் ஆனந்தையா, பகுதி வார்டு உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரன், திமுக பொறியாளர் அணி மாநில இணை செயலாளர் ஞானசேகரன், திராவிட கழக மாவட்ட செயலாளர் வனவேந்தன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, டோக்கன் வழங்கி, பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தனர்.








