சிலம்பம் சுற்றிய ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ் மற்றும் மாநகர மேயர் S A சத்யா, கயிறுழுத்து ஓசூர் Reporters மகிழ்ச்சி ஆரவாரம்! ஆண்கள் பெண்கள் என இரு பிரிவினருக்கும் ஓவியப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் போட்டி, பெண்களுக்கான சிறப்பு கோலம் போட்டி என பல்வேறுபோட்டிகள் நடைபெற்றது.
ஓசூரில் மாநகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓசூர் மாநகர திமுக செயலாளர், மாநகர மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ், உள்ளிட்ட கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஓசூர் மாநகர திமுக சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் ஓவியப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் போட்டி, ஆகிய போட்டிகள் நடைபெற்றது. மேலும் பெண்களுக்கான சிறப்பு கோலம் போட்டிகளும் நடைபெற்றன.
ஓசூர் மாநகர திமுக அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த புது பானையில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், இந்து, கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மத குருக்கள், குழந்தைகள், பெரியவர்கள், என ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, பொங்கலிட்டு சிறப்பித்தனர்.
சிறுவர்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்த பல்வேறு தொன்மை மரபு சார்ந்த நடனங்கள் மற்றும் சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.








