ஓசூரில் ஆளுநர் சர்ச்சை பேச்சு பேசினாரா? அல்லது சமூக சமத்துவம் குறித்து உரையாற்றினாரா? தமிழகத்தில் சமூக நீதி பேசும் நிலையில் சமூக ஏற்றத் தாழ்வுகள் இன்னும் ஒழிக்கப்டவில்லை என்று தனது கருத்தை பதிவு செய்தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றிட, அனைவரும் வள்ளலார் வழியினை பின்பற்றினால், தமிழகத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு முழுமையாக அகற்றபடும் என ஆளுநர் R N ரவி விளக்கிக் கூறினார்.
ஓசூரில் விவேகம் அறக்கட்டளை சார்பில், வள்ளலாரின் இருநூற்று இரண்டாவது வருவிக்கவுற்ற விழா கொண்டாடப்பட்டது. வருவிக்கவுற்ற என்றால், வள்ளலார் பெருமான், இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்க உற்ற நாளை, அதாவது பிறந்த நாளை குறிப்பிடுகின்றனர். அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் ஜீவகாருண்ய விருதுகள் வழங்கும் விழா இன்று ஓசூரில் நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் R N ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தலைமை உரை வழங்கினார்.
ஆளுநர் R N ரவி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அமைதியை போதித்த வள்ளலார் அடியானின் வணக்கம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஒவ்வொரு உயிரும் ஒன்றிற்கு ஒன்று ஈடானது என்று போதித்த வள்ளலார், நீதிக்கு புறம்பான நிலை தலை தூக்கும் போது தோன்றி, அனைவரையும் காப்பாற்றியவர். அவர் போதித்தது அமைதி, ஞான நெறி மற்றும் அனைவரும் ஒப்பானவர்கள் என்பதே. அதை தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்கும் முன்பே, வள்ளலார் அவர்களின் எழுத்து, வழிபாடுகள் குறித்து தான் அறிந்துக் கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். வள்ளலாரின் போதனைகளை பின்பற்றி, ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை வைத்து, வழிபாடு செய்வதாகவும் கூறினார். மேலும், தீண்டாமையை ஒழிக்கவும், சாதிய வேறுபாட்டை அகற்றவும், தங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என்று வள்ளலார் பாடுபட்டார். இதனை பின்பற்றி, கல்வி, உணவு, மருத்துவம், போன்ற மற்ற உதவிகளை செய்தவர்களுக்கு கருணை, அன்பு, இரக்கம் கொண்ட ஜீவகாருண்யம் விருதுகள், இந்த அமைப்பின் மூலமாக வழங்க படுவதை வெகுவாக பாரட்டுவதாக கூறினார். மேலும், பல நூற்றாண்டுகள் கடந்து வந்த பிறகும் சமூக நீதி ஏற்றத் தாழ்வுகளுடன் தான் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சமூக நீதி பேசும் நிலையில், சமூக ஏற்றத் தாழ்வுகள் இன்னும் ஒழிக்கப்ட வில்லை. இதனை அகற்றிட அனைவரும் வள்ளலார் வழியினை பின்பற்றினால் இது முழுமையாக அகற்ற படும் என்று நம்புவதாக கூறினார். பின்னர் சிறப்பாக தொண்டுகள் செய்த நூறு நபர்களுக்கு ஜீவகாருண்ய விருதுகளை ஆளுநர் வழங்கினார்.
எவ்விதத்திலும் ஓசூரில் ஆளுநர் R N ரவி அவர்கள் அரசியல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தாமல், வள்ளலாரின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தது, கூடியிருந்தவர்களின் பாராட்டைப் பெற்றது.








