Hosur News, ஓசூர் செய்திகள் - மொசைக்கலை என்றால் என்ன? இந்தக் கலையில் உலக சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும்? Mosaic Art

மொசைக்கலை என்றால் என்ன? இந்தக் கலையில் உலக சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும்? ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் வாழ்ந்து வரும் லூகாஸ், இந்த கலையில், 2022ம் ஆண்டு பல்வேறு வடிவங்களை வடிவமைத்து உலக சாதனை புத்தகமான, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தனது இளம் வயது முதலே, மொசைக் ஆர்ட் எனப்படும் கலையில் ஆர்வம் காட்டி வருகிறார். 

Mosaic Art அதாவது, மொசைக் கலை என்பது சிறிய, வண்ணமயமான கல், கண்ணாடி, செராமிக் துண்டுகள், காகித துண்டுகள் அல்லது பிற துண்டு பொருட்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கலை வடிவம் ஆகும். இது பெரும்பாலும் சுவரில், தரையில், புகைப்படங்களாக, tiles மற்றும் பல்வேறு அலங்காரப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. 

இந்த கலையின் அடிப்படை, வண்ணமயமான துண்டுகள் சேர்க்கப்பட்டு ஒரு உருவம் அல்லது வடிவம் ஏற்படுத்துவது. இந்த கலை மிகத் தொன்மையானது. மொசைக் கலை மிகப் பழமையானது. இது முதலில் மெசொப்பொத்தேமியா, கிரேக்கம், மற்றும் ரோமா காலங்களில் பிரபலமாக இருந்தது. பைசாந்தியக் காலத்தில் அதாவது, Byzantine periodல் பொன் மற்றும் கண்ணாடி துண்டுகளை சேர்த்து மிக அழகான கலைநயமிக்க மொசைக் உருவாக்கப்பட்டன. 

லூகாஸ், கடந்த மூன்று திங்கள்களாக, நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் வீதம் உழைத்து, மொசைக் ஆர்ட் கலையில் மூலம், திருக்குறளின் 133 

அதிகாரங்களை குறிப்பிடும் வகையில் 133 சதுர அடி பரப்பளவில், சுமார் 300,000 வண்ண வண்ண காகிதங்களிலான மொசைக் துண்டுகளை கொண்டு வள்ளுவர் சிலை அமைப்பை உருவாக்கியுள்ளார். 

திருவள்ளுவர் நாள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் கல்வி பண்பாட்டு அமைப்பில் அதாவது, யுனெஸ்கோ உலக தொன்மையான தளம் என்ற சிறப்பை இந்தச் சிலைக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில், மீண்டும் ஒரு உலக சாதனை முயற்சியை திருவள்ளுவருக்காக அர்ப்பணித்து, லூகாஸ் கடந்த நாள், முயற்சி செய்தார். 

அவரது முயற்சி வெற்றி பெற ஓசூர் ஆன்லைன் டாட் காம் சார்பில் வாழ்த்துகிறோம்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: