ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி, உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்டத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இதில் பி M ரவி குமார், N பசவராஜ். வி டி சுகேந்திரன், M சுகுணாம்மா, பாஸ்கர், ஆறுமுகம் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.








