ஒசூரில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். ஓசூரில் LPF, CITU, AITUC, INTUC உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம் நகரில், திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்த அளவு ஓய்வு ஊதியம் 9 ஆயிரம் என அறிவிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்று நிதி சேர்க்கும் முடிவை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை அனைவரும் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் LPF, CITU, AITUC, INTUC உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.








